close
Choose your channels

இளம் தம்பதியரின் கனவை நனவாக்குவாரா லட்சுமிராமகிருஷ்ணன்?

Saturday, September 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குணசித்திர நடிகையான லட்சுமிராமகிருஷ்ணன் ஏற்கனவே 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். 

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்திற்கு 'ஹவுஸ் ஓனர்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அசோக்செல்வன் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஜோடியாகவும் நடிக்கவுள்ளனர். 

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் நிலையில் ஒரு இளம் தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து என்றும் இந்த கருத்தை நகைச்சுவையுடன் இந்த படத்தில் கூறவுள்ளதாகவும் லட்சுமிராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஜோமன் டி.ஜான் என்பவர் பணிபுரியவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.