close
Choose your channels

'விஜய் 59' படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

Thursday, November 5, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்திற்கு 'வெற்றி' என்ற டைட்டில் வைக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் நடந்ததாக கூறப்படுகிறது.

மார்க்கெட் போன்ற பிரமாண்ட செட்டில் விஜய், எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளதாகவும், அந்த கெட்டப்பின் புகைப்படம் எதுவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகவாறு படக்குழுவினர் மிக ஜாக்கிரதையாக இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. அனேகமாக விஜய் இந்த படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டும் பெரிய தாடியுடன் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமை வியாபாரத்தின் பேச்சுவார்த்தையை தயாரிப்பாளர் தாணு நடத்தி வருவதாகவும் மிகப்பெரிய தொகைக்கு ஐங்கரன் நிறுவனம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெறும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.