close
Choose your channels

லொள்ளுசபா ராம்பாலா இயக்கத்தில் சந்தானம்?

Saturday, July 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வருடங்களாக கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை நட்சத்திரமாக கொடிகட்டி பறந்த சந்தானம், 'இனிமே இப்படித்தான்' என்ற படத்தில் ஹீரோவாகி நடித்து, ரசிகர்களின் மனதில் தானும் ஒரு ஹீரோதான் என்ற இமேஜை தோற்றுவித்துள்ளார். இந்நிலையில் சந்தானம் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்த மறைந்த இயக்குனர் ராம நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், சந்தானம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லொள்ளுசபா புகழ் ராம்பாலா இயக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஒரு படத்தை திட்டமிட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிடுவதில் பெயர் பெற்ற ஸ்ரீதேண்டாள் நிறுவனத்தின் படத்தில் நடிப்பது தற்போதைய நிலையில் சிறப்பாக இருக்கும் என சந்தானம் கருதியதால், இந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பேய்க்கதை சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என கூறப்பட்டாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை. சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கக்கூடிய நடிகை மற்றும் தொழில்நுட்ப தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.