close
Choose your channels

சச்சின் படத்தில் மதன் கார்க்கி பாடல்கள்

Thursday, May 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 'தோனி' படம் போலவே இந்த படமும் உலகம் முழுவதும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளதால் அதே 26ஆம் தேதி தமிழகத்திலும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பின் படத்திற்கு மூன்று பாடல்களை மதன்கார்க்கி எழுதியுள்ளார். இந்த தகவலை மதன் கார்க்கி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததோடு, தனக்கு வாய்ப்பளித்த இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் தெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை '200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.