close
Choose your channels

மாதவனின் 'இறுதிச்சுற்று' ரிலீஸ் தேதி

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா, கிருஷ்ணா நடித்த 'யட்சன்' படத்தை தயாரித்த யூடிவி நிறுவனம், சில காலம் தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை நிறுத்தி வைத்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மாதவன் நடித்த இறுதிச்சுற்று' படத்தின் உரிமையை பெற்று அடுத்த சுற்றுக்கு தயாராகியுள்ளது.

குத்துச்சண்டை வீரராக மாதவன் நடித்து வரும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான படமான 'இறுதிச்சுற்று' படத்தை தமிழ் மற்றும் இந்தியில் யூடிவி நிறுவனம் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை யூடிவி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 'வேட்டை' படத்திற்கு பின்னர் மாதவன் நடித்த தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு வருட இடைவெளிக்கு பின்னர் வெளிவரும் இந்த படம் மாதவனுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மாதவனுடன் ரித்திகா சிங், நாசர், ராதராவி, காளிவெங்கட் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுதா கொங்கார பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.