close
Choose your channels

பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் மாதவன்

Saturday, April 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் மாதவன், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் ரீஎண்ட்ரி ஆன திரைப்படம் 'இறுதிச்சுற்று'. மாதவன், ரித்திகாசிங் நடிப்பில் சுதா இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி குத்துச்சண்டை வீரர் மைக் டைசனே பாராட்டும் அளவுக்கு உலகப்புகழ் பெற்றது.


இந்நிலையில் பிரபல இயக்குனர் கரு.பழநியப்பன் இயக்கத்தில் ஒரு படத்தில் மாதவன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கரு.பழநியப்பன் ஏற்கனவே பார்த்திபன் கனவு', 'பிரிவோம் சந்திப்போம்', உள்பட பல படங்களை இயக்கியவர். கரு.பழநியப்பன் தற்போது ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்துள்ளதாகவும், இந்த படத்தில் மாதவன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மாதவன் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து 'விக்ரம் வேதா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே....

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.