close
Choose your channels

விஜய்யின் 'தெறி'யுடன் கனெக்சன் ஆகும் விஜய்சேதுபதியின் 'சீதக்காதி'

Wednesday, April 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது படமான 'சீதக்காதி' படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தில் இளையதளபதி விஜய்யின் 'தெறி' படத்தில் அட்டகாசமான வில்லன் கேரக்டரில் நடித்த பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை இயக்குனர் பாலாஜி உறுதி செய்துள்ளார்.

'சீதக்காதி' படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கியவேடத்தில் நடிக்கவுள்ளது உண்மைதான். ஆனால் அவர் நடிக்கும் வேடம் குறித்து இப்போது என்னால் எதையும் கூற முடியாது என்று இயக்குனர் பாலாஜி தரணிதரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகன் என்று கூற முடியாது என்றும் இந்த படம் நாயகன், நாயகி இல்லாத ஒரு படம் என்றும் கூறிய பாலாஜி, விஜய்சேதுபதியின் கேரக்டரை சுற்றியே இந்த படத்தின் கதை அமைந்துள்ளது என்று கூறினார்.

நடிகர் வேடத்தில் விஜய்சேதுபதியும் நடிகைகளாக நயன்தாரா, ரம்யா நம்பீசன், காயத்ரி மற்றும் ஓவியா உள்பட பிரபல நடிகைகள் சிறப்பு தோற்றத்திலும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.