close
Choose your channels

தமிழ் ரசிகர்களுக்காக மகேஷ்பாபு எடுக்கும் முதல் முயற்சி

Thursday, July 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு முதன்முதலாக நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்றும் அந்த படத்திற்கு பிரமோற்சம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் மகேஷ்பாபு நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள ஸ்ரீமந்துடு திரைப்படம், தெலுங்கில் ரிலீஸாகும் அதே தினத்தில் தமிழிலும் டப் செய்து வெளியாகவுள்ளது என கூறப்படுகிறது.

மகேஷ்பாபு நன்றாக தமிழ் பேசக்கூடியவர் என்பதால் அவரே தனது கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசி வருவதாகவும், மகேஷ்பாபுவின் திரைப்படம் ஒன்று தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.


மகேஷ்பாபு நடித்த Seethamma Vakitlo Sirimalle Chettu, பிசினஸ்மேன் படங்கள் உள்பட பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழக ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் சமீபத்தில் ரிலீஸான 'பாகுபலி' படத்தின் தமிழ்ப்பதிப்பு பெற்ற மாபெரும் வரவேற்பே, ஸ்ரீமந்துடு படத்தை தமிழில் ரிலீஸ் செய்யும் ஆர்வத்தை படக்குழுவினர்களுக்கு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் தமிழில் புகழ்பெற்றவர்கள் என்பதால் கண்டிப்பாக தமிழில் இந்த படம் மாபெரும் வெற்றி அடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மகேஷ்பாபு, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத், சுகன்யா, பிரம்மானந்தம், சனம் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகை பூர்ணா, குத்து நடனம் ஒன்றில் ஆடியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.