close
Choose your channels

முதன்முதலாக இணையும் அஜித்-மகேஷ்பாபு? ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

Tuesday, August 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படத்தின் டீசர் மகேஷ்பாபுவின் பிறந்த நாளான நாளை வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளிவரவுள்ளன.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி புதன்கிழமை இந்த படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளின் டிரைலர் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித்தின் விவேகம் வெளிவரவுள்ள நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளிவருவது மட்டுமெ செய்தி அல்ல, 'விவேகம்' திரையிடும் திரையரங்குகளிலும் 'ஸ்பைடர்' டிரைலர் திரையிடும் திட்டமும் படக்குழுவினர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்தும் மகேஷ்பாபுவும் இதுவரை இணைந்து நடித்ததில்லை என்றாலும் இந்த தகவல் அஜித், மகேஷ்பாபு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சிதான். இந்த தகவல் மட்டும் உறுதியானால் ஒரே திரையில் அஜித், மகேஷ்பாபுவை பார்த்து இரட்டை விருந்து அனுபவித்த திருப்தி ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.