close
Choose your channels

தமிழில் தயாராகும் உலகப்புகழ் பெற்ற ஈரான் இயக்குனர் படம்

Tuesday, June 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஈரான் இயக்குனர் மஜித் மஜிடி படம் என்றாலே உலகப்புகழ் பெற்றது என்பது சினிமாவை தெரிந்த அனைவருக்கும் தெரியும். அவரது பாதுக்(Baduk), சில்ரன் ஆஃப் ஹெவன்,(Children of Heaven) த கலர் ஆஃப் பாரடைஸ்,( The Color Of Paradise) பாரன்,( Baran) த வில்லோ ட்ரீ, ( The Willow Tree) த சாங் ஆஃப் ஸ்பாரோஸ், (The Song of Sparrows) மொஹமத் தமெசன்ஜர் ஆஃப் காட் (Muhammad The Messenger of God). ஆகிய திரைப்படங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்த படங்கள் ஆகும்.

இந்த நிலையில் தற்போது மஜித் மஜிடி, 'பியண்ட் த க்ளவுட்ஸ்' என்ற படத்தை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படம் தமிழிலும் தயாராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற படங்கள் போல ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு குரலை மட்டும் வேறு மொழிக்கு மாற்றாமல் மூன்று மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் , மலையாள நடிகை மாளவிகா மோகனன், பழம்பெரும் தமிழ் நடிகை ஜி வி சாரதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். அண்ணன் - தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டீ ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்த படத்தின் திரைக்கதையிலும் , உள்ளடக்கத்திலும் மூன்று மொழிகளுக்கான கூறுகள் உள்ளன. அதனால் தான் இந்த மூன்று மொழிகளைச் சார்ந்த கலைஞர்களை அதன் மரபு மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இயக்குனர் மஜித் மஜிடி தேர்ந்தெடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு திரைக்கதையில் தமிழக நகரம் இடம்பெற்றிருந்தால், அவர் தமிழக நகரத்திற்கு வந்து தமிழ் பேசும் மக்களின் பின்னணியில் தான் அந்த காட்சியை படமாக்குகிறார். இதன் மூலம் தன்னுடைய படைப்பிற்கான நேர்மையை வழங்குவதில் தன்னிகரற்று திகழ்வதாக இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.