close
Choose your channels

மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி கூட்டணி மற்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் புரமோஷன் ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் முன்பதிவும் மிக அபாரமாக இருந்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் படக்குழுவினர்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தியாக, இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்த செய்தியும் இணணந்துள்ளது. இந்த செய்தி படக்குழுவினர்களுக்கு மட்டுமின்றி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய முந்தைய படமான 'ஓகே கண்மணி', நல்ல வசூலை பெற்றதால் இந்த படமும் அதேபோன்ற வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருண் என்ற பைலட் கேரக்டரில் கார்த்தியும், லீலா ஆப்ரஹாம் என்ற டாக்டர் கேரக்டரில் அதிதி ராவ் ஹைதரியும் நடித்துள்ள இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ், ருக்மணி விஜயகுமார், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் திரை விமர்சனத்தை நாளை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.