close
Choose your channels

'காற்று வெளியிடை' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

Friday, March 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்திற்கு மிகபெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது.

'காற்று வெளியிடை' படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் 30% வரிவிலக்கை பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த படத்தின் சென்சார் கிடைத்துவிட்டதை அடுத்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு தினத்திற்கு ஒருவாரம் முன்பாக அதாவது ஏப்ரல், 7ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.