close
Choose your channels

அஜித்துடன் கனெக்ஷன் ஆகும் சிம்புவின் அடுத்த படம்

Sunday, April 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'தல அஜித்தின் பிறந்த நாள் வரும் மே மாதம் 1ஆம் தேதி வரவுள்ள நிலையில் இப்போதே அவரது ரசிகர்கள் அட்வான்ஸாக அஜித் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, தனது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அஜித் பிறந்த நாளில் வெளியிடவுள்ளாராம்.
த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் அஜித் பிறந்த நாளான மே 1ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று வித்தியாசமான வேடங்களில் பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பும் அன்றைய தினமே தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.