close
Choose your channels

நயன்தாராவின் 'மாயா' டிராக் லிஸ்ட்

Friday, July 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

Nayanthara, Aari, Maya

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள மாயா' திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் பாடல் வெளியீடு வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல்கள் டிராக் லிஸ்ட் குறித்த விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த பேய்ப்படமான இந்த படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளது. ரோன் எதான் யோஹன் இசையமைத்துள்ள இந்த படத்தில் இரண்டு பாடல்களை குட்டி ரேவதி என்பவரும் ஒரு பாடலை உமாதேவி என்பவரும் எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் விபரம் வருமாறு:

1. ஆயிரம் ஆயிரம்: குட்டி ரேவதி எழுதியுள்ள இந்த பாடலை சின்மயி பாடியுள்ளார்.

2. நானே வருவேன்: உமாதேவி எழுதியுள்ள இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளர்.

3. தூங்கா கண்கள்: குட்டி ரேவதி எழுதியுள்ள இந்த பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்
.

முதன்முதலாக அம்மா கேரக்டரில் நடித்துள்ள நயன்தாராவுடன் நெடுஞ்சாலை' பட ஹீரோ ஆரி, அம்ஜத்கான், லக்ஷ்மி ப்ரியா, சந்திரமெளலி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அஸ்வின் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் விரைவில் வெளியிடவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.