close
Choose your channels

ஜெயம் ரவியின் 'மிருதன்' ரிலீஸ் செய்யும் நிறுவனம்

Tuesday, November 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'தனி ஒருவன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'மிருதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு 90%க்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், விரைவில் சென்னையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, லட்சுமிமேனன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைக்க எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

வரும் பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு டிசம்பரில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.