close
Choose your channels

டெல்லி செல்கிறார் மு.க.ஸ்டாலின். திமுகவின் அதிரடி ஆரம்பம்

Tuesday, February 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வராக இன்று சசிகலா பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் கவர்னர் வருகையின் தாமதம் காரணமாக பதவியேற்புவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் சசிகலா முதல்வர் பதவியேற்பதை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென டெல்லி செல்லவுள்ளதாக திமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களிடம் மு.க.ஸ்டாலின் நேரில் முறையிட உள்ளதாகவும், மேலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பின் பதவியேற்பு விழாவை அனுமதிக்குமாறு ஜனாதிபதியையும், உள்துறை அமைச்சரையும் வலியுறுத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலா பதவியேற்பதற்கு எதிராக திமுகவும் தனது அதிரடியை ஆரம்பித்துவிட்டதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.