close
Choose your channels

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் தோனியின் காதலி

Saturday, May 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் 'ஸ்பைடர்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இந்த படம் இவ்வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள படமாக உள்ளது.

இந்த நிலையில் 'ஸ்பைடர்' படத்தை அடுத்து மகேஷ்பாபு, கொரடலா சிவா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். டிவிவி தனய்யா தயாரிக்கும் இந்த படத்திற்கு 'பாரத் அனே நேனு' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக கியரா அத்வானி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கிரிக்கெட் தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் காதலி மற்றும் மனைவி சாக்ஷி தோனி கேரக்டரில் நடித்தவர் தான் இந்த கியரா அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.