close
Choose your channels

பாரதிராஜா, கமல்ஹாசன் பட இசையமைப்பாளருக்கு விவாகரத்து

Friday, June 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்த 'தசாவதாரம்' ஆகிய தமிழ்படங்களுக்கும் ஏராளமான இந்தி படங்களுக்கும் இசையமைத்தவர் ஹிமேஷ் ரேஷ்மியா. இவருக்கும் கோமல் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஸ்வயம் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் ஹிமேஷ்-கோமல் தம்பதிகள் கருத்துவேறுபாடு காரணமாக பிரிய முடிவெடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் விவாகரத்து கோரி பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுமீதான விசாரணை முடிந்து நேற்று இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இசையமைப்பாளர் ஹிமேஷூம், பிரபல பாலிவுட் நடிகை சோனியா கபூரும் காதலித்து வருவதாகவும், இதனால் தான் ஹிமேஷ்-கோமல் தம்பதியினர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.