close
Choose your channels

எடப்பாடி பழனிச்சாமிக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ ஆதரவு

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான நட்ராஜ், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் யாருடைய அணிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தொகுதியில் தன்னுடைய பணியை பார்த்து கொண்டிருப்பதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்த நட்ராஜ் எம்.எல்.ஏ அவர்கள் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
நட்ராஜ் எம்.எல்.ஏ கண்டிப்பாக ஓபிஎஸ் அணியை ஆதரிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் நேற்று தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்த நிலையில் தற்போது அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளது ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.