close
Choose your channels

கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் பூங்கொத்து கொடுத்து பாராட்டு

Wednesday, November 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' திரைப்படத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள் கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல், சிறந்த சவுண்ட் எஞ்ஜினியர் ஆகிய விருதுகளை பெற்ற இந்த படத்தின் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் 'உத்தமவில்லன்' படக்குழுவினர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று இன்று வாழ்த்து தெரிவித்தனர்.

நாசர் தலைமையிலான நடிகர் சங்க குழு இன்று கமல்ஹாசனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். உறுப்பினர்களின் வாழ்த்துக்களை கமல்ஹாசன் அன்புடன் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 'உத்தம வில்லன்' படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.