close
Choose your channels

நடிகர் சங்கத்திற்கு 'தல' தீபாவளி - நாசர்

Friday, November 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பொறுபேற்ற நாசர் அணியினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கவுள்ளதாக அறிவித்தனர்.

அதன்படி கமல், ரஜினி உள்பட சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 3500 பேர்களுக்கு வேட்டி அல்லது சேலை மற்றும் இனிப்புகள் அடங்கிய தீபாவளி பரிசு இன்று வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பரிசை பெற்று சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்களிடையே பேசிய நாசர், 'நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இது ஒரு 'தல' தீபாவளி' என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வந்து பரிசுகளை பெற முடியாத உறுப்பினர்களுக்கு அவர்களுடையே வீடுகளுக்கே பரிசுப்பொருட்கள் சென்றடைய ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.