close
Choose your channels

சூர்யாவின் '24' பட கலைஞருக்கு தேசிய விருது

Friday, April 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த தமிழ் படமான அனைவரும் எதிர்பார்த்த ராஜூமுருகனின் 'ஜோக்கர்' படம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற 'ஜாஸ்மின் யூ' என்ற பாடலை பாடிய சுந்தர ஐயர் என்பவருக்கு சிறந்த பாடகர் விருது கிடைத்துள்ளது.

அதேபோல் 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'எந்த பக்கம்' பாடலை எழுந்திய வைரமுத்து அவர்களுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்றான சூர்யாவின் '24' திரைப்படத்தில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்த திரு அவர்களுக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது.

விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.