close
Choose your channels

நட்டி நட்ராஜின் 'போங்கு': திரை முன்னோட்டம்

Saturday, May 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சதுரங்க வேட்டை', 'கதம் கதம்' போன்ற படங்களில் நடித்த நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடித்த அடுத்த படம் தான் 'போங்கு' நட்டி நட்ராஜுடன், ரூஹி சிங், சுமன், பூஜா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தாஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படம் கார் திருடர்களின் கதை என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தாஜ் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'போங்கு` டிராவலிங் பற்றிய படம். சாலைகளில் அதுவும் நே‌ஷனல் ஹைவேஸ் ரோடுகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ அது மாதிரி திரைக்கதை பறபறன்னு பறக்கும். நட்டிக்குன்னு தைத்து வெச்ச சட்டை மாதிரி கேரக்டர் அப்படியே பொருந்திவிட்டது. படம் ஜூன் 2ல் வெளியாகிறது. நல்ல படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். போங்கு` படத்துக்கும் அது கிடைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியபோது, 'இந்த படத்தில் ரோல்ஸ்ராய் கார் ஒன்று ஒரு கேரக்டராகவே வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நாடு முழுவதும் தேடி கடைசியாக ஐதராபாத்தில் உள்ள பிரமாண்டமான கார் ஷோரூம் ஒன்றில் முக்கிய காட்சிகளை படமாக்கினோம். கிளைமாக்ஸ் காட்சியை கொளுத்தும் வெயிலில், புழுதி பறக்க படமாக்கினோம். இந்த காட்சிகள் திரையில் தோன்றும்போது அனல் பறக்கும் என்றும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் அமைந்த ஒரு ஆக்சன் படம் என்றும் கூறியுள்ளார்.

ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம் மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் தேவா இசையில், கபிலன், தாமரை, மதன்கார்க்கி பாடல் வரிகளில், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. 'சதுரங்க வேட்டை' போலவே நட்டிக்கு இந்த படம் திருப்புமுனை படமாக அமையுமா என்பதை வரும் வெள்ளியன்று இந்த படத்தின் திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.