close
Choose your channels

நயன்தாராவின் 'டோரா' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்ப்பு

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மாயா' சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து அவர் நடித்து முடித்துள்ள மற்றொரு திகில் படம் 'டோரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்தின் டீசர் நாளை அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை அவரது உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார்.
நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்திற்கு
விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். இவர்களுடைய இசையில் அனிருத் 'ரா ரா ரா' என்ற பாடலை பாடியுள்ளார் என்பதும் அந்த பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது என்பதும் அறிந்ததே.
மேலும் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு 'கார்'தான் பேய் என்றும், அந்த காருக்கும் நயன்தாராவுக்கும் உள்ள சம்பந்தம் தான் கதையின் முக்கிய டுவிஸ்ட் என்றும் படக்குழுவினர்களால் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.