close
Choose your channels

நயன்தாரா படத்திற்கு பட கமல் டைட்டில்

Saturday, April 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மாயா' படத்தை அடுத்து சற்குணம் தயாரிப்பில் அவரது உதவியாளர் தாஸ் இயக்கும் திகில் படம் ஒன்றில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்திற்கு 'டிக் டிக் டிக்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இதே பெயரில் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ஒன்று கடந்த 1981ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கோலிவுட்டின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் கிட்டத்தட்ட நயன்தாரா நடித்துவிட்டாலும், கமல்ஹாசனுடன் இன்னும் அவர் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர் நடித்த படத்தின் டைட்டிலில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டிக் டிக்' படத்தில் நயன்தாரா 'மாயா' படத்தை போலவே முக்கிய வேடத்திலும் ஹரிஷ் உத்தமன் போலீஸ் வேடத்திலும் நடிக்கின்றனர். வடகறி மற்றும் புகழ் போன்ற படங்களுக்கு இசையமைத்த மெர்வின் சாலமன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

நயன்தாரா தற்போது கார்த்தியுடன் காஷ்மோரா மற்றும் விக்ரமுடன் 'இருமுகன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.