close
Choose your channels

விஜய்யின் எளிமையை பார்த்து வியந்த நியூசிலாந்து நடிகை

Monday, February 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இலங்கையை பூர்வீகமாக கொண்டு நியூசிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இளம்பெண் சஜா என்பவர் தற்போது கோலிவுட்டில் நாயகியாகியுள்ளார் தமிழ்ப் பெண்ணான இவர் கோலிவுட் குறித்தும், விஜய்யின் எளிமை மற்றும் விஜய்சேதுபதியின் கடின உழைப்பு ஆகியவை குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

இந்த பேட்டியில் சஜா, 'பைரவா' படப்பிடிப்பின்போது விஜய்யை நேரில் பார்த்ததாகவும், மிகப்பெரிய நடிகரான விஜய் எளிமையாக இருப்பதை பார்த்து வியந்ததாக தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் விஜய்சேதுபதியின் கடின உழைப்பு தன்னை கவர்ந்ததாகவும், 'றெக்க' படப்பிடிப்பின்போது அவருடன் செல்பி எடுத்து கொண்டபோது, அந்த படத்தின் ஒளிப்பதிவாளரின் பரிந்துரை காரணமாக தற்போது 'காதல் நகரம்' என்ற படத்தில் நடித்து கொண்டிருப்பதாக சஜா கூறியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு செமிபைனல் வரை வந்த சஜா, 'காதல் நகரம்' படம் தனக்கு ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.