close
Choose your channels

சிறுவயது தோழனுக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கி கல்ராணி

Sunday, May 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'டார்லிங்' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் 'யாகாவராயினும் நாகாக்க', 'கோ 2', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', உள்பட பல திரைப்படங்களில் நடித்து கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகை நிக்கி கல்ராணி. இந்த நிலையில் இவர் நடிக்கும் மலையாள படம் 'டீம் 5'. பிரபல முன்னாள் கிரிக்கெட் விரர் ஸ்ரீசாந்த் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நிக்கி கல்ராணி அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்.

ஸ்ரீசாந்துடன் நடிப்பது குறித்து நிக்கி கல்ராணி கூறுகையில், 'ஸ்ரீசாந்தை எனக்கு சிறு வயது முதலே தெரியும். பெங்களூரில் இருந்தபோது எனக்கு அறிமுகமான அவர் எனது சகோதரிக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவருடன் ஒரு படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. சிறுவயது தோழனுடன் இணைந்து நடிப்பது ஒரு தனி அனுபவம் தான்' என்று கூறினார்.

'டீம் 5' படத்தில் ஸ்ரீசாந்த் ஒரு பைக் ரைடராகவும், அவருக்கு ஸ்பான்சர் செய்யும் பைக் நிறுவனத்தின் HR ஆக நிக்கி கல்ராணியும் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை சுரேஷ் கோவிந்த் என்பவர் இயக்கி வருகிறார்.

நிக்கி கல்ராணி தற்போது தமிழில் 'நெருப்புடா', 'மரகத நாணயம்', 'கீ', ஹரிஹர மகாதேவா' மற்றும் 'பக்கா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.