close
Choose your channels

'நேரம்' நிவின்பாலி நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்

Wednesday, April 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'நேரம்' படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமான நிவின்பாலி, அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக வேறு தமிழ்ப்படத்தில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் நிவின்பாலி நடிக்கவுள்ள இரண்டாவது தமிழ்ப்படம் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி நடித்து இயக்கிய 'Ulidavaru Kandanthe என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்தில்தான் நிவின்பாலி நடிக்கவுள்ளார். ஜப்பான் மொழி திரைப்படமான Rashomon என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கவுள்ளார். இவர் பிரபல இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.