close
Choose your channels

கொம்பனுடன் இணையும் பாயும் புலி

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தல் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு புறம் திட்டமிட்ட படப்பிடிப்புகளை தவறாமல் நடத்தி வரும் நடிகர் விஷால், சமீபத்தில் பாயும் புலி' படப்பிடிப்பை முடித்துவிட்டார். இந்நிலையில் நேற்று முதல் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷால், இன்னொரு படத்திலும் விரைவில் ஒப்பந்தமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

குட்டிப்புலி, சுந்தரபாண்டியன், கொம்பன் ஆகிய ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஷால் நடிக்கவுள்ளார். இந்த தகவலை இயக்குனர் முத்தையா உறுதி செய்துள்ளார். இந்த படத்தை மதுரை நகரின் பிரபல விநியோகிஸ்தர் அன்பு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஷால்-முத்தையா இணையவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறும் என்றும், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை உடனே துவக்கவுள்ளதாகவும் முத்தையா தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சுசீந்திரன், பாண்டிராஜ், முத்தையா ஆகிய இயக்குனர்களின் படங்களை அடுத்து விஷால் லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படத்திற்கு விரைவில் தயாராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.