close
Choose your channels

அஜித் ரசிகர்களின் ஆதரவால் கலக்கிய 'கட்டமராயுடு' ஓப்பனிங் வசூல்

Monday, March 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு மாநிலங்களில் பவர்ஸ்டர் பவன்கல்யாண் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு புதியவர். இருப்பினும் அவர் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்றிருப்பதற்கு ஒரே காரணம், அந்த படம் அஜித்தின் 'வீரம்' படத்தின் ரீமேக் என்பதுதான். இந்த படத்திற்கு அஜித் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்ததால் கலக்கலான ஒப்பனிங் வசூலை தமிழகம் முழுவதும் பெற்றுள்ளது

'கட்டமராயுடு' திரைப்படம் சென்னையில் 14 திரையரங்க வளாகங்களில் 104 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.32,80,170 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் இந்த படத்திற்கு 85% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள தெலுங்கு ரசிகர்கள், அஜித் ரசிகர்களின் ஆதரவு, ஸ்ருதிஹாசனின் தமிழ் ரசிகர்கள் ஆகிய காரணங்களால் சிறப்பான ஓப்பனிங் வசூலை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.