close
Choose your channels

அஜித்தை அடுத்து விஜய் பட ரீமேக்கில் பவன்கல்யாண்?

Wednesday, March 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ரீமேக்கில் பவன்கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகின்றது. இந்த படம் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் மிக அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித் பட ரீமேக்கை அடுத்து விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகிய 'தெறி' படத்தின் ரீமேக்கில் பவன்கல்யாண் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிவடைந்தவுடன் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 'தெறி' திரைப்படம் நேரடியாக 'போலீஸ்' என்ற பெயரில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது என்பது அறிந்ததே.

மேலும் பவன்கல்யாண அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ரீமேக்கிலும் நடிக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. பவன்கல்யாணின் அடுத்த படம் 'தெறி' ரீமேக்கா? அல்லது 'வேதாளம்' ரீமேக்கா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.