close
Choose your channels

கவுதம் மேனனின் அடுத்த படத்தில் விஷ்ணு-தமன்னா

Saturday, March 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை அவர் தயாரித்தும் வருகிறார்.
இந்த நிலையில் கவுதம் மேனன் தயாரிக்கவுள்ள இன்னொரு படத்தில் முதல்முறையாக விஷ்ணுவிஷால் மற்றும் தமன்னா ஜோடி சேரவுள்ளனர். தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன 'Pelli choopulu' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'பொன் ஒன்று கண்டேன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை செந்தில் வீராசாமி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.