close
Choose your channels

தெலுங்கை அடுத்து கன்னடத்திலும் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் தமிழ் படம்

Saturday, September 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகியது. ரூ.50 லட்சம் செலவு செய்து தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் வசூல் மழை பொழிந்து ரூ.8 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்தது

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது கன்னடத்திலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனி நடித்த கேர்கடரில் விஜய் தேவரகொண்டா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமீபத்தில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 'பிச்சைக்காரன்' படத்தை இந்தியில் உருவாக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது கன்னடத்திலும் ரீமேக் செய்யவுள்ளதால் இந்த படம் ஒரு அகில இந்திய படமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.