close
Choose your channels

தூங்காவனத்தில் கமலுக்கு வில்லனான பிரபல ஹீரோ

Tuesday, July 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலின் த்ரில்லர் படமான தூங்காவனத்தின் படப்பிடிப்பு ஈசிஆர் ரோட்டில் இரவு நேரங்களில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தில் கமல் உள்பட திரிஷா, மது ஷாலினி, ஆஷா சரத், உமா ரியாஸ் கான், கிஷோர், சம்பத் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் சற்று எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார்கள். கமலின் உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா இயக்க ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

தற்போது எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தூங்காவனத்தில் பிரதான வில்லைனாக ஒரு பிரபல கதாநாயகன் நடித்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. படக்குழு யாரந்த பிரபலம் என்பதை மூடி மறைத்தாலும் கசிந்த செய்தி என்னவென்றால் அந்த கதாநாயகன் கமலின் நெருங்கிய நண்பரென்றும் அவருடன் இணைந்து அடிக்கடி பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது. உங்களால் யாரென்று யூகிக்க முடிந்தால் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.