close
Choose your channels

'பாகுபலி 2' படத்தின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசூல்

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி 'பாகுபலி' படத்தை இரண்டு பாகங்களாக இயக்க முடிவு செய்தபோது இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டதாம். ஆனால் 'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மேலும் பிரமாண்டமாக செலவு செய்ய படகுழுவினர் முடிவு செய்தனர்.
'பாகுபலி' உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்த நிலையில் 'பாகுபலி 2' படத்திற்கு மட்டுமே தற்போது ரூ.243 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் மட்டுமே ரூ.500 கோடி ஆக வாய்ப்பு உள்ளது என்றும், ரூ.1000 கோடி வசூல் செய்யும் முதல் இந்திய படம் என்ற பெருமைய பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது.
ரூ.740 கோடி வசூல் செய்து இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள படம் அமீர்கானின் 'பிகே'. இந்த படத்தின் வசூல் சாதனையை 'பாகுபலி' முறியடித்து புதிய சாதனை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.