close
Choose your channels

விஜய் 60' படத்தின் எடிட்டர் பெயர் அறிவிப்பு

Thursday, November 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தின் இயக்குனர் பரதன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் எடிட்டரின் பெயரும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல எடிட்டரும் 'ஆரண்ய காண்டம்' என்ற திரைப்படத்திற்காக சிறந்த எடிட்டர் விருது பெற்றவருமான ப்ரவீண் கே.எல் அவர்கள் விஜய் 60' படத்தின் எடிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ப்ரவீண் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ப்ரவீண் தனது சமூகவலைத்தளத்தில் இளையதளபதி விஜய்க்கும், இயக்குனர் பரதன் அவர்களுக்கும் தான் நன்றி கூறிக்கொள்வதாகவும், விஜய் ரசிகர்களின் பாச மழையால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

விஜய் 60' படத்தின் இயக்குனர், எடிட்டர் ஆகியோர் அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.