close
Choose your channels

இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஏ.எம்.ரத்னம்

Wednesday, November 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல், அஜீத், விஜய், சிரஞ்சீவி, பவண்கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்த முன்னணி தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம், தற்போது தயாரித்துள்ள 'வேதாளம்' வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் ஏ.எம்.ரத்னம் அடுத்து இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'நானும் ரெளடிதான்' இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் 'டிமாண்ட்டி காலன்' இயக்குனர் அஜய் ஞானமுத்து ஆகியோர் இயக்கவுள்ள படங்களை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் 61வது படத்தையும் இவர்தான் தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எம்.ரத்னம் ஏற்கனவே இந்தியன், குஷி, கில்லி, ரன், ஆரம்பம், என்னை அறிந்தால் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.