close
Choose your channels

பாஜகவில் இணைந்த ரஜினி பட தயாரிப்பாளர்

Tuesday, August 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில வருடங்களாக கோலிவுட் திரையுலகினர் பலர் இணைந்து வருகின்றனர். சமீபத்தில் கங்கை அமரன், நெப்போலியன், கஸ்தூரி ராஜா, குட்டிபத்மினி, காயத்ரி ரகுராம் உள்பட பலர் இணைந்து கட்சியில் பதவிகளிலும் உள்ளனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் சோலைக்குயில், மலையூர் மம்பட்டியான் போன்ற படங்களை தயாரித்தவரும், 'அழகர்சாமியின் குதிரை, நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் நடித்தவருமான அழகன் தமிழ்மணி நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்த தகவலை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
அழகன் தமிழ்மணி தயாரிப்பாளர் மட்டுமின்றி சுதந்திரபோராட்ட தியாகி மணலி கந்தசாமி பிள்ளை அவர்களின் வளர்ப்பு மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் இணைந்தது குறித்து அழகன் தமிழ்மகன் கூறுகையில் 'பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நிர்வாகம் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதன் காரணமாக என்னை பா.ஜ.க-வில் இணைத்து கொண்டேன். இந்த நல்லாட்சி சாதனைகள் மக்களுக்குச் சென்றடைய உழைப்பேன்''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.