close
Choose your channels

'புலி' டிரைலர் விமர்சனம்

Thursday, August 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வண்ணம் இன்று அதிகாலை மிகச்சரியாக 12 மணிக்கு இளையதளபதியின் "புலி' பட டிரைலர் இணையதளங்களிலும், ஒரு முன்னணி தொலைக்காட்சியிலும் ரிலீஸாகியது. நாம் எதிர்பார்த்தபடியே இந்த டிரைலர் பல கேள்விகளுக்கு விடையளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காட்சியே அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு பெரிய மலையில் உள்ள கோட்டை தெரிகிறது. அந்த கோட்டைதான் மகாராணி ஸ்ரீதேவியின் கோட்டையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாட்டில் ஒரு கொடுங்கோல் ஆட்சி நடக்கின்றது என்பதை பயத்தோடு இருக்கும் பொதுமக்கள், குழந்தைகளின் கழுத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாள் போன்ற ஐந்தாறு ஷாட்களில் மிக தெளிவாக புரிய வைக்கின்றனர்.

இளையதளபதியின் அறிமுகக்காட்சியே அதிர வைக்கின்றது. கொடுங்கோல ஆட்சியில் இருந்து மக்களை மீட்க வந்த வீர இளைஞராக விஜய் அறிமுகமாகிறார். சண்டைக்காட்சிகளில் உள்ள வேகமும், அதற்கு தேவிஸ்ரீ பிரசாத் கொடுத்துள்ள பின்னணியும் அதிர வைக்கின்றது. வழக்கம்போல் விஜய்யின் பிரம்மாதமான டான்ஸ், காதல், நகைச்சுவை போன்ற அம்சங்கள் இருப்பது தெரிய வருகிறது. ஸ்ருதிஹாசனின் தொடர் முத்தம் விஜய்-ஸ்ருதிஹாசன் ரொமான்ஸ் காட்சிகளை புரிய வைக்கின்றது.


மேலும் இந்த படத்தில் சித்திரக்குள்ளன் வேடம் இருப்பதாக உறுதியான செய்தி வந்திருந்தபோதிலும், அந்த சித்திரக்குள்ளர்கள் வேடத்தில் யார் நடித்தார்கள் என்ற கேள்விக்கு இந்த டிரைலரில் பதில் கிடைத்துள்ளது. ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா ராமன் உள்பட சிலர் சித்திரக்குள்ளர்கள் வேடத்தில் நடித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளதால் கண்டிப்பாக இந்த படம் காமெடியிலும் களை கட்டும் என்பது உறுதியாகிறது.

ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தாலும், விஜய்க்கு அடுத்தபடியாக இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஸ்ரீதேவிதான் என்பது டிரைலரின் காட்சிகளில் இருந்து தெரிய வருகிறது. அவருடைய சீரியஸான முகம், அவர் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் என்பதை வெளிக்காட்டுகிறது. அவருடைய சிக்கலை விஜய்தான் தீர்த்து வைப்பார் என்பதை நாம் சொல்ல தேவையில்லை.

பாகுபலி' படத்தில் வருவதுபோலவே ஒரு பிரமாண்ட சிலை தண்ணீரின் நடுவில் வைக்கப்பட்டு அதை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்துவது போன்ற காட்சி பல யூகங்களை எழ வைக்கின்றது. சுதீப்பின் சீரியஸான வில்லத்தனமான பார்வை அவர் எந்த அளவுக்கு விஜய்க்கு ஈடுகொடுத்திருப்பார் என்பதை புரியவைக்கின்றது. 'பாகுபலி' படத்திற்கு பின்னர் பிரபாஸ் எப்படி தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தாரோ அதுபோல், இந்த படம் வெளிவந்த பிறகு சுதீப்புக்கு நிச்சயம் தமிழக ரசிகர்களிடம் ஒரு மாபெரும் வரவேற்பு இருக்கும் என்பது உறுதி

பல அடி உயரமுள்ள பிரமாண்டமான மனிதன் ஒரு இரு வீரர்களை அசால்ட்டாக இரண்டு கைகளினால் தூக்கி எறியும் காட்சி அதிர வைக்கின்றது. இந்த படத்தில் சுதீப்பை தவிர விஜய்க்கு வில்லனாக இந்த பிரமாண்டமான உருவமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக 'பாசத்துக்கு முன்னாடிதான் நான் பனி, பகைக்கு முன்னாடி நான் 'புலி'' என்ற பஞ்ச் டயலாக் ரசிகர்களை அதிர வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் பெஸ்ட் பஞ்ச் டயலாக்குகளில் இது முன்னணி இடத்தை பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. அதிலும் 'பகைக்கு முன்னாடி நான்" என்று சொல்லி சில வினாடிகள் நிறுத்திவிட்டு விஜய் தன் கையில் இருக்கும் வாளை சுழற்றும் வேகம் இருக்கின்றதே..சூப்பர்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை அனைத்து தரப்பினர்களும் விரும்பும் வகையில் அதிர வைத்துள்ளது. டிரைலரில் அமைந்துள்ள பிரமாண்டம், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள், செட், காஸ்ட்யூம் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, தயாரிப்பாளரின் பட்ஜெட்டை உணர முடிகிறது. மேலும் சிம்புதேவனின் இயக்கம், அவரது முந்தைய படங்களின் சாயல் சிறிதும் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை தருகிறது. நிச்சயம் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது டிரைலர் ரிலீஸாகி சில மணி நேரங்களில் மூன்று லட்சங்களுக்கும் மேல் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இருந்து புரிய வருகிறது. எதிர்பார்ப்பை எகிற வைத்த இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது. அன்றைய தினம் இந்த படத்தின் முழு விமர்சனத்தை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.