close
Choose your channels

மோகன்லால் படத்துடன் கனெக்சன் ஆன அஜித்தின் 'விவேகம்'

Tuesday, June 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதையும் இந்த படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமை மிகப்பெரிய தொகைக்கு வியாபாரன் ஆனதாக வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'விவேகம்' படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை 'முளகுப்படம் பிலிம்ஸ் (Mulakupadam Films) நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தான் மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' படத்தை தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல அனுபவமுள்ள நிறுவனம் கேரள ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதால் இந்த படம் கேரளாவில் அதிகளவிலான திரையரங்குகளில் திரையிடப்படும் என தெரிகிறது.

அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.