close
Choose your channels

'நந்தா' சூர்யா கேரக்டரில் நடிக்கும் பிரபல தயாரிப்பாளர்

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தருமான ஆர்.கே.சுரேஷ், தேசிய விருது பெற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் நடிகரானார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஆர்.கே.சுரேஷின் நடிப்பிற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் தற்போது முழுநேர நடிகராகிவிட்டார். ஹீரோவாக மட்டுமே நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் அவர், தற்போது மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

'மன்னாரு' பட இயக்குனர் ஜெய்சங்கர் கூறிய கதை ஒன்று தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், உடனே அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறிய ஆர்.கே.சுரேஷ், இந்த படத்திற்கு 'வேட்டை நாய்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்\

இந்த படத்தில் 'நந்தா' படத்தில் சூர்யா நடித்தது போன்ற கேரக்டரில் தான் நடிக்கவிருப்பதாக கூறிய ஆர்.கே.சுரேஷ், இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிர்வாகக்குழு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.சுரேஷ், இன்னும் சில நிமிடங்களில் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.