close
Choose your channels

இரண்டே வாரத்தில் பஸ் ஓட்ட கற்றுக்கொண்ட பிரபல நடிகை

Wednesday, February 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் திரைப்படம் 'இப்படை வெல்லும்'. கவுரவ் இயக்கி வரும் இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை ராதிகா நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு பஸ் டிரைவர் வேடம். இந்த கேரக்டர் இயல்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் தீவிர முயற்சி எடுத்து இரண்டே வாரங்களில் சரளமாக பஸ் ஓட்ட கற்று கொண்டாராம். இதுகுறித்து படக்குழுவினர் பெருமையுடன் கூறி வருகின்றனர். வாகனம் ஓட்டும் காட்சிகளில் நடிக்கும்போது இளையதலைமுறை நடிகைகளே டூப் வைத்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வயதிலும் கேரக்டருக்கு உயிர் கொடுக்க ராதிகா எடுத்துள்ள முயற்சியை படக்குழுவினர் பெரிதும் பாராட்டினர்.

ராதிகா பஸ் ஓட்டும் காட்சிகள் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.