close
Choose your channels

ராகவா லாரன்சுக்கு ஜோடியாகும் அஜித்-விஜய் நாயகி

Friday, May 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டின் இரண்டு மாஸ் ஸ்டார்களான அஜித் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும். ஆனால் வெகுசிலருக்கு மட்டுமே இருவருடனும் ஒரே நேரத்தில் ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். விஜய்யின் 'புலி' மற்றும் அஜித்தின் 'வேதாளம்' படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்தார்.

அதேபோல் தற்போது அஜித்தின் 'விவேகம்' மற்றும் விஜய்யின் 'தளபதி 61' ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருபவர் காஜல் அகர்வால். இந்நிலையில் காஜல் அகர்வாலின் அடுத்த படம் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் என்று கூறப்படுகிறது.

ஆம், 'சிவலிங்கா', 'மொட்ட சிவா கெட்ட சிவா' படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு 'பாகுபலி' புகழ் விஜயேந்திர பிரசாத் கதை எழுதவுள்ளதாகவும், எஸ்.எஸ்.ராஜமெளலியின் உதவியாளர் மகாதேவ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.