close
Choose your channels

ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்

Friday, September 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மொட்ட சிவா கெட்ட சிவா' மற்றும் 'சிவலிங்கா' படங்கள் எதிர்பார்த்த வசூலை குவிக்காத நிலையில் அவர் தற்போது 'முனி' படத்தின் 4ஆம் பாகத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய மூன்று பாகங்களும் சூப்பர் ஹிட் என்பதால் தற்போது 4ஆம் பாகம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் முனி முதல் பாகத்தில் நடித்த வேதிகா என்றும் கூறப்படுகிறது. மற்ற இரண்டு ஹீரோயின்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், அதுமட்டுமின்றி மூன்று பாகங்களிலும் நடித்த கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமான் ஆகியோர்களும் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ராகவா லாரன்ஸும் இணைந்து தயாரிக்கலாம் என்றும் இதுகுறித்த முறையான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.