close
Choose your channels

ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் 'கபாலி?

Sunday, August 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் மலேசியாவில் தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் முடிவடந்துள்ள நிலையில் ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் விரைவில் மலேசியாவுக்கு பயணம் செய்யவுள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கு நாளில் ரஜினியின் புகைப்படத்துடன் கூடிய பர்ஸ்ட் லுக், 'இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்' என்ற வாசகங்களுடன் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. முதலில் இந்த படத்திற்கு 'காளி' என்றும் அதன் பின்னர் கண்ணபிரான்' என்றும் டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது 'இந்த படத்திற்கு 'கபாலி' என்ற டைட்டிலை ரஞ்சித் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கதை சென்னையில் தாதாவாக வாழந்த ஒருவருடைய உண்மைக்கதையின் அடிப்படையில் அமைக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மலேசியாவுக்கு செல்லும் முன்பாக மைலாப்பூரில் அமைக்கப்பட்டுள்ள செட் ஒன்றில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் 'கபாலீஸ்வரன் என்றும் அதனால் இந்த செண்டிமெண்டாக இந்த படத்தின் படப்பிடிப்பு மைலாப்பூரில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.