close
Choose your channels

நான் கமல் கோபத்தை 100% பார்த்தவன். சந்திரஹாசன் நினைவஞ்சலி கூட்டத்தில் ரஜினி

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள அவருடைய மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்த நிலையில் இன்று சென்னை காமராஜர் அரங்கில் சந்திரஹாசனுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன், சாருஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாவது: என்னுடைய நண்பர் கமல் அவர்களுக்கு 3 தகப்பனார். முதல் தகப்பனார் அவரை பெற்றவர், இரண்டாது தகப்பனார் அவரை வளர்த்த சாருஹாசன், மூன்றாவது தகப்பனார் அவரது முன்னேற்றத்திற்கு காரணமான சந்திரஹாசன், சாருஹாசன் அவர்களுடன் நான் நிறைய பழகியுள்ளேன். ஆனால் சந்திரஹாசன் அவர்களை நான் ஒரிரு முறை மட்டுமே பேசியுள்ளேன் ஆனாலும் அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டுள்ளேன்.

இப்ப்போதுள்ள இளம் நடிகர்கள் வைத்துள்ள பணம் கூட கமல் அவர்களிடம் இல்லை. இதுதான் உண்மை. இதை நான் கவலையுடன் கூற வேண்டிய நிலையில் உள்ளேன். ஆனால் அவர் இதுகுறித்து எந்த கவலையும் இல்லாது இருப்பார். அதுதான் கமல். இனிமேல் அவர் பணம் விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சாருஹாசன் தான் அவரை வழிநடத்த வேண்டும்.

கமல் போல ஒரு கோபக்காரரை நான் பார்த்ததே இல்லை. நீங்கள் அவருடைய கோபத்தை 10% தான் பார்த்து இருப்பீர்கள், நான் 100% பார்த்துருக்கேன். அதனால்தான் நான் அவரிடம் ஜாக்கிரதையா இருப்பேன், அவரிடம் அன்பாக சொல்வது சாருஹாசன் அவர்களும், அதட்டிக்கொண்டு இருப்பது சந்திரஹாசன் அவர்களும்தான். இப்போது சந்திரஹாசன் இல்லாததால் அனைத்து பொறுப்பும் சாருஹாசன் அவர்கள் மீதுதான் உள்ளது' இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.