close
Choose your channels

ரஜினி-ஷங்கர் இணையும் 'எந்திரன் 2' பணிகள் ஆரம்பம்

Saturday, July 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன்' படம் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்த நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்குரிய ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் பணிபுரியும் முக்கிய டெக்னீஷியன்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ரத்னவேலு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த படத்தை 'கத்தி' படத்தை தயாரித்த லைகா நிறுவனம் வழங்க ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ள ரஜினிகாந்த், அந்த படத்தை இவ்வருட இறுதிக்குள் முடித்துவிட்டு, வரும் 2016ஆம் ஆண்டு 'எந்திரன் 2' படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்வார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் இரண்டாம் பாகத்திலும் நடிப்பாரா? மற்றும் வில்லனாக அர்னால்ட் நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்திகள் உண்மையா? என்பதற்கான பதில்கள் வரும் நாட்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.