பத்தாம் வகுப்பை கூட பாஸ் செய்யாத சசிகலா
Friday, February 17, 2017 • தமிழ் Comments

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வராக பதவியேற்று மக்களின் மனங்களை வென்ற ஓபிஎஸ் அவர்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து, முதல்வர் பதவியில் அமர முயன்ற சசிகலாவுக்கு விதி ஜெயில் பாதையை வழிகாட்டிவிட்டது. இதனால் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வராகியுள்ளார்.
 

இந்நிலையில் சசிகலா படித்த திருத்துறைப்பூண்டி பள்ளி மூடப்படும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 1965ஆம் ஆண்டு திருத்துறைபாண்டியில் உள்ள போர்டு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பில் சேர்ந்த சசிகலா, இந்த பள்ளியில் 10வது வரை படித்ததாகவும், ஆனால் அவர் பத்தாம் வகுப்பில் பாஸ் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் பத்து வருடங்கள் கழித்து அதாவது 1975ஆம் ஆண்டுதான் தனது சான்றிதழை அவர் பள்ளியில் இருந்து பெற்று சென்றுள்ளார்.

முன்னாள் முதல்வரின் உயிர்த்தோழியாக கடந்த 33 ஆண்டுகளாக இருந்த சசிகலா, தான் படித்த பள்ளிக்கு எதுவுமே செய்யவில்லை என்றும் தற்போது இந்த பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா படிக்கும் போது சுமார் 2500 பேர் படித்த இப்பள்ளியில் தற்போது வெறும் 250 பேர் மட்டுமே படித்து வருவதாகவும் போதிய ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லாததால் இங்கு படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த சதவிகித்ததிலேயே அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. சசிகலாவின் ஆதரவாளர் தற்போது முதல்வராக இருப்பதால் இந்த பள்ளிக்கு விமோசனம் பிறக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News