close
Choose your channels

டிடிவி தினகரனை எதிர்க்கும் திமுக வேட்பாளர் இவர்தான்

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக உள்ளன. சற்று முன்னர் இந்த தொகுதியின் அதிமுக சசிகலா அணியின் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டார்.

டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒருசில நிமிடங்களில் இந்த தொகுதியின் திமுக வேட்பாளராக என். மருது கணேஷ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். மருது கணேஷ், ஆர்.கே நகர் திமுக பகுதிச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக சசிகலா அணி, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் அதிமுக ஓபிஎஸ் அணி, பாஜக மற்றும் சில கட்சிகள் இன்னும் ஒருசில நாட்களில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இந்த தொகுதியில் போட்டியிடபோவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.