close
Choose your channels

ஸ்டார் ஓட்டலுக்கு நிகராக எகிறிய ஆர்.கே.நகர் வீட்டு வாடகை

Wednesday, April 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஸ்டார் ஓட்டல்களில் தங்க ஒருநாள் வாடகை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்ந்து வரும் ஆர்.கே.நகரில் ஒரு சிறிய அறை அல்லது சிறிய வீட்டின் வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இப்போதல்ல.. கடந்த சில நாட்களுக்கு முன்..
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த தொகுதியை கைப்பற்றுவது என்பதை ஒரு மானப்பிரச்சனையாக அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவு செய்ததால் ஒரு மாதத்திற்கு முன்பே அந்த தொகுதியில் சிறிய அறை, சிறிய வீடு ஆகியவற்றை வாடகைக்கு எடுக்க தொடங்கிவிட்டன.
அரசியல்வாதிகளின் அவசரத்தை தெரிந்து கொண்ட அந்த பகுதி வீட்டு உரிமையாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை வாடகையாக வசூல் செய்தனர். அரசியல் கட்சிகளும் எந்த பேரமும் பேசாமல் கொடுத்துவிட்டதால் வீட்டு உரிமையாளர் காட்டில் மழை. இந்த வீடுகளில் ஐந்து முதல் பத்து பேர் வரை தங்கி தேர்தல் வேலைகளை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் தற்போது மீண்டும் தேர்தல் அறிவிப்பு முந்தைய நிலைக்கு வீட்டு வாடகை சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.